Ads (728x90)

மங்குஸ்தான் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தயாமின், நியாசின், போலேட் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. 

இவை கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சியை மாற்றும் பணிகளில் அதிக அளவில் உதவுகின்றன.

மங்குஸ்தான் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. மங்குஸ்தான் பழங்களை அதிகமாக சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். 

கண்களின் பார்வைத்திறன் தெளிவாக இருக்க வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம், நிகோடினிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியம். மங்குஸ்தான் பழத்தில் இந்த சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே மங்குஸ்தான் பழங்களைத் தினம்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருவது கண் பார்வை திறனுக்கு மிகவும் உகந்தது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு சிறந்த வரபிரசாதம். மங்குஸ்தான் பழத்தைத் தினமும் ஒரு முறை என மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி சத்து அடங்கியுள்ளது. இது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். 


Post a Comment

Recent News

Recent Posts Widget