அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உயர் திறன்களைக் கொண்ட சர்வதேச அளவில் போட்டித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 03 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியை நேரடி முதலீடாக பெறுவதற்கான திட்டங்கள்.
பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள்.
எரிபொருளுக்கு மேலதிக வரி.
கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணங்கள் அதிகரிப்பு.
ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா உற்பத்தியை மேற்கொள்வதற்காக விசேட குழு நியமிப்பு.
தனியார்துறை ஊழியர்களுக்கும் காப்புறுதித்திட்டம்.
அரச மருத்துவமனைகளில் மீண்டும் கட்டண வார்ட்முறை அமுல்.
18 வருட சேவைக்கு பிறகு ஆயுதப்படையினருக்கு முன்கூட்டியே ஓய்வுபெற அனுமதிக்கப்படும்.
2023 இறுதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கணிசமான நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு.
2023 – 2032 காலப்பகுதியில் புதிய ஏற்றுமதிகளின் ஊடாக 03 பில்லியன் டொலர் வருடாந்த வருமான அதிகரிப்படும்.
சர்வதேச வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கை.
சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7% – 8% உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்ப்பு.
2023 ஜனவரி முதல் பல இறக்குமதி வரிகள் படிப்படியாகக் குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்கள் என்பன விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
உலகளாவிய போக்கை கருத்தில் கொண்டு குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியும் சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ளப்படும்
சுற்றுச்சூழலுக்கு உகந்த பச்சை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் என்பன தொடர்பான புதிய பொருளாதாரத்தின் கீழ் விசேட கவனம்.
அரச ஊழியர்களுக்கு 2023 ஆண்டு இறுதியில் சலுகைகள் வழங்க நடவடிக்கை. தனியார் துறைக்கும் வழங்க ஆலோசனை.
இலங்கையின் வரலாறு மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனம் ஒன்றை நிறுவுதல்.
அரச ஊழியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி சலுகைகள் போன்று தனியார் துறையினருக்கும் அத்தகைய காப்புறுதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தேவைக்கேற்ப அரச சேவைகளை வழங்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படுகிறது.
பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பெறும் 75 மாணவர்களுக்கு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டப்படிப்பை படிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 75 பேருக்கு 75 வெளிநாட்டுப் பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள்.
ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மைமிகு பொருளாதாரம்.
கிராமப்புற பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்த 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும், புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும் தேவையான வசதிகள் வழங்கப்படும்.
வறிய மற்றும் நலிவடைந்த குழுக்களைப் பராமரிப்பது தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்படும்.
தகவல் பாதுகாப்பு அதிகார சபை உருவாக்கப்படும்.
அரச சேவை துறையை முழுமையாக மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்.
யாழ்ப்பாணம், பெரதெனிய, ருஹுணு பல்கலைக்கழங்களின் மருத்துவ மேற்படிப்புக்களை ஆரம்பிக்க நிதி ஒதுக்கீடு.
பல்துறைசார் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக 50 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய பொருளாதார முறைமை.
தாய்லாந்துடன் மற்றும் சிங்கப்பூருடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் தீர்மானம்.
இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய வேலைத்திட்டங்கள், புதிய அணுகுமுறையின் மூலம், இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உகந்த புதிய பொருளாதாரத்தை உருவாக்குதல்.
8.3 வீதமாக உள்ள தேசிய மொத்த வருமானத்தை 2025 ஆண்டில் 15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை.
சமூக பாதுகாப்பு, திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாக அடுத்த 10 ஆண்டுகளில் 7 வீத பொருளாதார வளர்ச்சியும் 10 பில்லியின் நேரடி சர்வதேச முதலீடுகளும் இலக்காக உள்ளது.
போட்டிச்சந்தை வாய்ப்புகள், இயற்கை பொருளாதாரம், தொழில்நுட்ப வர்த்தகம், ஆகிய துறைகளில் புதிய பொருளாதார கொள்கைகளை உருவாக்குதல்.
புதிய பொருளாதார சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான புதிய பயணத்தை உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதியன்று ஆரம்பமாகும். இதன் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
Post a Comment