வரவு செலவுத் திட்ட உரையின் இரண்டாம் வாசிப்பு கடந்த ஆறு நாட்களாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் ஏழாவது நாளான இன்றைய விவாதத்தைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
2023 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 3,415 பில்லியன் ரூபா. மொத்த செலவினம் 5,819 பில்லியன் ரூபா.
இதேவேளை குழுநிலை விவாதம் நாளை முதல் 13 நாட்களுக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
Post a Comment