Ads (728x90)

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் கட்டாய வயதெல்லையை 60 ஆக அறிவித்து பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் 2023 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பினூடாக அல்லது ஏனைய சட்டங்களின் ஊடாக கட்டாய ஓய்விற்கான வயதெல்லை குறிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதில் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என இந்த அதிவிசேட வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget