2021 ஆம் ஆண்டில் மத்தள சர்வதேச விமான நிலையத்தின் இயக்கச் செலவு 2.02 பில்லியன் ரூபாவாக இருந்தது. இந்த தொகையான அதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருமானத்தை விட இருபத்தொரு மடங்கு அதிகமாகவும் இருந்தது.
விமான நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் (தனியார்) நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை கடந்த 24ஆம் திகதி ஆய்வுக்கு உட்படுத்தும்போதே கணக்காய்வாளர் நாயகம் இந்த தகவலை வெளியிட்டார்.
விமான நிலையம் மற்றும் வானூர்தி சேவைகள் நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்கான தமது வருடாந்த அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கடனாளிகளின் நிலுவைத் தொகையான 1.4135 பில்லியன் ரூபா நிதியை மீளப்பெறுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment