Ads (728x90)

வட மாகாண பாடசாலைகளில் கடமையாற்றி ஓய்வு பெறும் அதிபர்கள் தாங்கள் ஓய்வு பெறும்போது தாங்கள் நினைத்தபடி எவரிடமும் பாடசாலையை பொறுப்புக் கொடுக்க முடியாது என மாகாண கல்வி திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 

எதிர்வரும் 31ம் திகதி வடமாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் பல அதிபர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில் மாகாண கல்வி அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள 13 வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் எழுத்த மூலமாக இந்த அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. 

அதில் எதிர்வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் பாடசாலைகளின் அதிபர்கள் அந்தந்த வலயக் கல்விப்பணிப்பாளர்களின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் வலயக் கல்விப்பணிப்பாளரின் வழிகாட்டலுடன் புதிய அதிபர் கடமையை பொறுப்பேற்கும்வரை தற்காலிகமாக பிறிதொருவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget