இதனை உடனடியாக முழுமையாக நடைமுறைபடுத்தி விட முடியாது. அதற்காக கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கு விரும்புகின்றேன். கட்டங்கட்டமாக அந்த 13 வது திருத்த சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
தமிழ் மக்களிற்கு மட்டும் பிரச்சினைகள் இல்லை. நாட்டிலுள்ள எல்லா தரப்பினருக்கும் உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி இப்போது பேசுகிறேன்.
விரைவில் முஸ்லிம், மலையக மக்களின் பிரச்சினைகளையும் பேசுவேன். சிங்கள மக்கள் மத்தியிலும் பிரச்சினைகள் உள்ளன. அனைத்து பிரச்சினைகளையும் 2 வருடங்களிற்குள் தீர்க்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment