தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நலம் விசாரிக்கும் வகையில் சினேகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கொழும்பில் உள்ள அவருடைய இல்லத்திற்கு நேற்று சென்றிருந்தார்.
இதன்போது இரா.சம்பந்தன் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளுக்காக பொன்னாடை போர்த்தி கௌரவித்த முன்னாள் ஜனாதிபதி சிநேகபூர்வமான கலந்துரையாடலினை நடத்தியிருக்கின்றார். இதன்போதே சம்பந்தன் மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு-கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடாத்தி சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை தமிழர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சியான பொதுஜன பெரமுனவும் கலந்துகொள்ளும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
Post a Comment