Ads (728x90)

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை சோதனையிடும் நடவடிக்கையில் பொலிஸாரை ஈடுபடுத்தவேண்டாம் என மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

களனி - சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

எந்தவொரு பாடசாலை மாணவர்களினதும் புத்தகப்பைகளை சோதனையிட வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அது பாடசாலைகளுக்கு உரித்தான பொறுப்பாகும். பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளைபாடசாலை நிர்வாகம், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget