Ads (728x90)

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சிவில் அமைப்புகளால் கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப்பேரணி மீது கொள்ளுப்பிட்டி பகுதியில் பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

150 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும், வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யூனியன் பிளேஸ் ஊடாக காலி முகத்திடலுக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget