Ads (728x90)

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணங்களை செலுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

340 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி, இடம், பத்திரங்கள், வேட்பாளர்கள், பெண் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உறுப்பினர்கள் எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டும். அதற்கான தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னதாக நடைபெற வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget