மூன்றாவது தவணையாக 336 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. 48 மாதகால செயற்திட்டத்துக்கு அமைய சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இதுவரை 1 பில்லியன் டொலர் வழங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை தற்போது முன்னேற்றகரமான நிலையில் காணப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி முன்னேற்றமடைந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 5.5 பில்லியன் டொலர்களாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த மாதம் பணவீக்கத்தை 0.9 சதவீதமளவுக்கு கொண்டு வந்துள்ளமை முன்னேற்றத்தின் சிறந்த போக்கினை காட்டுகிறது.
அத்துடன் வரி வருமானம் நூற்றுக்கு 9.8 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கமாகும்.பொருளாதார மீட்சிக்காக இலங்கை செயற்படுத்தியுள்ள மறுசீரமைப்புக்கள் வெற்றிப் பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளரான கென்ஜி ஒகமுரா குறிப்பிட்டுள்ளதாவது, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் நிதி செயலாற்றுகை பலமடைந்துள்ளது.
பொருளாதார மீட்சிக்கான அடிப்படை அம்சங்களில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. நிதி நிலைபேறான தன்மையை பேணுவதற்கும், உத்தேச இலக்குகளை அடைவதற்கும் கடன் மறுசீரமைப்பு விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும். அத்துடன் மீண்டெழும் செலவுகளை வரையறுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment