Ads (728x90)

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த 'ரோமியோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். 

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் ஆகஸ்டில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget