கோவிலுக்கு வரும் மனிதர்களின் எண்ணங்களில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை இந்த மணி ஓசை நீக்கி விடுகிறது.
பூஜை மணியிலிருந்து உருவாகும் ஒலியானது மனதை ஒருநிலைப்படுத்தும். நேர்மறை ஆற்றலை உண்டாக்கும். மூளையின் விழிப்புணர்வை அதிகப்படுத்தி, மூளையின் இடது, வலது பக்கங்களை சமநிலையில் இயங்க செய்கிறது. மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்யும். மூளையின் இருபக்கமும் சரிசமமாய் வேலை செய்யும்போது மனது அலைப்பாயாமல் ஒருநிலைப்படும். மனநிம்மதியும், அமைதியும் கிடைக்கும்.
பூஜையின்போது ஒலிக்கவிடும் மணியானது மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் என சொல்லப்படும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாஹதம், விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ரஹாரத்தினை சீர்ப்படுத்துகிறது.
மணிகள் பித்தளையில் ஆனது என சொல்லப்பட்டாலும், இது உண்மையில் துத்தநாகம், நிக்கல், ஈயம், குரோமியம், தாமிரம் மற்றும் மங்கனீசு ஆகிய ஆறு கனிமங்களின் கலவையால் ஆனது. இந்த ஆறு தனிமங்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து செய்யப்படும் மணிகளிலிருந்து எழும்பும் ஓசையினால் எழும் அதிர்வலையானது சுமார் ஏழு நிமிடங்களுக்கு நமது உடலில் தங்கும்.
Post a Comment