Ads (728x90)

தென்கொரியா எல்லைக்குள் குப்பைகள் நிரம்பிய 300 க்கும் மேற்பட்ட இராட்சத பலூன்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் எல்லை பகுதியில் ஒலிப்பெருக்கிகள் மூலம் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஒலிப்பெருக்கி பிரசாரம் செய்வதால் தேவையற்ற பிரச்சினைகள் எழலாம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மிக அபாயகரமான சூழலுக்கு இது வழிவகுத்துவிடும்," என்று அவர் தெரிவித்திருந்தார். அண்மையில் பலூன்களில் குப்பை காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இடம்பெற்று இருந்தது.

வடகொரியாவின் பலூன்கள் அனுப்பும் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரியா சார்பில் ஒலிப்பெருக்கி பிரசாரம் தொடங்கப்பட்டது. 

இதில் ஒலிப்பெருக்கிகள் மூலம் கிம் ஜாங் உன் எதிர்ப்பு பிரசாரம் மற்றும் பிரபலமான தென் கொரிய பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget