தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு, புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
ஆரத்தி எடுப்பதால் கண் திருஷ்டி நீங்கும் என நம் முன்னோர்கள் கூறுவார்கள். இதன் முக்கிய நோக்கமே யாருக்கு ஆரத்தி எடுக்கிறோமோ அவருக்கு லட்சுமி, சரஸ்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் என்பதாகும்.
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலை 03 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.
மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் நோக்கம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேணுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கப்படுகிறது.
Post a Comment