நாம் தரையில் அமரும்போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்வது ‘சுகாசனம்’ எனப்படும் ஒரு யோகாசனப் பயிற்சியாகும். இந்த நிலை செரிமானத்திற்கு உதவுகிறது.
தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உணவு எடுப்பதற்கு நாம் முன்னால் செல்லுவோம். உணவு எடுத்த பிறகு பின்னால் வருவோம். இந்த செயல்பாட்டால் வயிற்றில் உள்ள தசைகள் செயல்பட்டு எளிமையான செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.
தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. தரையில் அமரும்போது வேகஸ் என்னும் நரம்பு சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இது வயிறு நிறைந்தவுடன் தகவலை உடனடியாக மூளைக்கு அனுப்புகிறது. அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு உடல் எடை சீராகிறது.
தரையில் அமர்வது இன்னொரு ஆசனமான பத்மாசனத்துடன் தொடர்புடையது. இதன் மூலம் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் அனைத்தும் விரிவடைகிறது.
தரையில் அமர்ந்து உணவு சாப்பிடும் பொழுது உடல் தசைகள் நன்றாக செயல்பட்டு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கிறது.
தரையில் அமர்ந்து சாப்பிட்டு, எந்த ஒரு உதவியும் இல்லாமல் எழுந்து நிற்பவர்களுக்கு ஆயுள் அதிகமாவதையும் ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், நமது ஆயுள் அதிகரிப்பதற்கும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒரு எளிய பயிற்சியாகும். தொடர்ச்சியாக முட்டிகளை மடக்கி அமர்வதனால் மூட்டுகளுக்கும், இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகளுக்கும் உறுதி கிடைக்கிறது.
Post a Comment