Ads (728x90)

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றியீட்டியது.

இப்போட்டியில் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 138 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

இந்தியாவும், இலங்கையும் தலா 137 ஓட்டங்களைப் பெற்றதால் சுப்பர் ஓவர் அறிமுகப்படுத்தப்பட்டது. சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3 - 0 என முழுமையாகக் சுவீகரித்தது.

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதில் முதலாவது ஆட்டத்தில் 43 ஓட்ட வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget