Ads (728x90)

தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'VD12' திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்புகள் இலங்கையில் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கௌதம் தின்னனுரியின் இயக்கத்தில் உருவாக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் பல்வேறு நகரங்களில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். இதன்போது சில அதிரடி காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'VD12 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget