சிறைத் தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
2015ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரை டிபெண்டர் ரக வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Post a Comment