Ads (728x90)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்த மாத இறுதிப்பகுதியில் அறிவிப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் பணிகளுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதற்கு தடையேதும் கிடையாது. கடந்த காலங்களை காட்டிலும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் குறித்து மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். ஆகவே சுதந்திரமாகவும், நீதியாகவும் தேர்தலை நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று கிடைக்கவுள்ள நிலையில் இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு தொடர்பில் வௌியிடப்படும் பல்வேறு வதந்திகள், கருத்துகள் போன்றவற்றை தௌிவுபடுத்துவதற்காகவே இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்ததாக தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து எழுப்பப்படும் மாறுபட்ட கருத்துக்கள் குறித்து மக்களை தெளிவுப்படுத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. 

அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget