Ads (728x90)

ஜனாதிபதித் தேர்தலைத் தடுக்கக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் குறித்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

மனுதாரர் தமது மனுவில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் பொதுசன வாக்கெடுப்பின் மூலம் முறையாக அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதித் தேர்தலைத் தடுக்கக் கோரியிருந்தார்.

அத்துடன் வழக்கு செலவுக் கட்டணமாக 5 இலட்சம் ரூபாவை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget