Ads (728x90)

நகைச்சுவையில் அசத்தும் இயக்குனர்களில் ஒருவரான சிம்பு தேவனின் இயக்கத்தில் உருவானதே ”போட்” திரைப்படம். 

இவர் இயக்கத்தில் வெளிவந்த 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்கள் எப்போது பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது.

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பேபி, சின்னி ஜெயந்த், எம் எஸ் பாஸ்கர், கௌரி கிஷன் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் மற்றும் கலைவாணி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை பார்த்துவிட்டு பிரபல மூத்த முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி. ஸ்ரீராம் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

"சிம்பு தேவனின் போட் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் இந்திய சினிமாவில் இது மற்றொரு மைல்கல்லாக இருக்கும். மிகவும் அழகான அனுபவம்" என கூறியுள்ளார். இதன்மூலம் போட் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஆகஸ்ட் 2ஆம் திகதி வெளிவரவிருக்கும் போட் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget