Ads (728x90)

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இப்பரீட்சைக்கு 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும், 65,331 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 452,979 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.  நாடளாவிய ரீதியில் இப்பரீட்சை 3,527 நிலையங்களில் நடைபெற்றிருந்தது.

பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பரீட்சைப் பெறுபேறுகளின் அச்சிடப்பட்ட நகலை பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் வினவ வேண்டுமாயின் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கலாம் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget