Ads (728x90)

இந்த ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. பரீட்சைக்கு முன்னர் வெளியானதாக தெரிவிக்கப்படும் 3 வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகள் வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

பிரச்சினைக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இக்குழுவில் கல்வியியலாளர்கள், கல்வி உளவியலாளர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், புள்ளிவிபரவியல் நிபுணர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

மீண்டும் பரீட்சையை நடத்துவது 10 வயதுக்குட்பட்ட மாணவர்களின் மனநிலையில் கடுமையான பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் நீதி வழங்குவது இன்றியமையாதது என்றும், எனவே பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சைக்கு முன்னர் வெளியானதாக விவாதிக்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget