Ads (728x90)

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணி முதல் 12.15 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வருடம் ஐந்தாம் தரப் பரீட்சைக்கு 323,879 மாணவர்கள் தோற்றவுள்ளதோடு நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சைக்கு பேனா பயன்படுத்தினால் கருப்பு அல்லது நீல நிற பேனாவையே பயன்படுத்த வேண்டும் என்றும் வேறு நிறங்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் பென்சிலை பயன்படுத்தினால் அதற்கு தடையில்லை எனவும், பென்சிலால் எழுதும் பிள்ளைகள் சில பென்சில்களை எடுத்து வருமாறும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்வு மையத்திற்கு அழிப்பான், மற்றும் தண்ணீர் போத்தல் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் இன்றைய தினம் பரீட்சை நிலையங்களைச் சுற்றி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது பிள்ளைகள் எதிர்கொள்ளும் முதலாவது பரீட்சை என்றும், சமூகப் பொறுப்பாக இதனைக் கருத்திற்கொண்டு அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget