Ads (728x90)

ஜனாதிபதியின் செயலாளராக சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க பொருளாதார அபிவிருத்திக் கற்கை தொடர்பான கலாநிதி (PhD) பட்டம் பெற்றுள்ளார். இலங்கை இறைவரி திணைக்களத்தின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜப்பானின் National Graduate Institute for Policy Studies (GRIPS) நிறுவனத்தில் அபிவிருத்தி பொருளாதாரம் தொடர்பான கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளதோடு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் அரச பொருளியல் தொடர்பில் (Public Economics) முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.

கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கத்துறையில் ஊழல் ஒழிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளதோடு அந்த ஆய்வுகள், சர்வதேச வெளியீடுகள் பலவற்றில் பிரசுரமாகியுள்ளன.

இவர் உலக சுங்க அமைப்பின் (World Customs Organization) சுங்க நவீனமயமாக்கல் தொடர்பான பட்டய ஆலோசகர் என்பதோடு பணிவிணக்க மேம்பாடு தொடர்பான நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். சம்பத் துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 52 (I) பிரிவின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சீன தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக பாதுகாப்புக் கல்வி தொடர்பான விஞ்ஞானப் பட்டதாரியான எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியுமாவார். 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். இவர் விசேட அதிரடிப் படையின் ஆரம்பகால உறுப்பினராகவும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளராகவும், தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் முதல் செயலாளராகவும், இன்டர்போல் இலங்கைக் கிளையின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget