குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு 'நாமல் தெக்ம' (நாமலின் தொலைநோக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது.
2024 ஜனாதிபதி தேர்தலில் நாம் எதிர்வரும் 5 முதல் 10 வருடங்களுக்கு முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களை நாம் வெளியிட்டுள்ளோம் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாம் இயலுமானதையே செய்வோம். போலிவாக்குறுதிகளை வழங்கமாட்டோம். நாட்டின் இறைமையை பாதுகாத்து தேசிய பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டியது எமது கடமையாகும். நாம் அரசியல் வரப்பிரசாதங்களுக்காக செயற்படுபவர்கள் அல்ல.
30 வருடகாலத்தினை முடிவுக்கு கொண்டுவந்த அரசாங்கம். கொவிட் பரவலை வெற்றிகரமாக முறியடித்த அரசாங்கம். நாம் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவோம்.
இந்த நாட்டின் தேசிய உற்பத்தியை 2 மடங்காக அதிகரிப்போம். டிஜிட்டல் முறைமையினுடாக நாட்டின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். நாட்டில் வரிசையுகம் ஏற்படுவதை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரமுடியும்.
எமது அரசாங்கத்தில் முதல் 6 மாதங்களுக்குள் அரச சேவையினை டிஜிட்டல் மயப்படுத்துவோம். இதனூடாக மக்கள் இலகுவாக அரச சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.
வரியினை குறைப்போம். அதேபோல் மக்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவிலேயே வரியினை நடைமுறைப்படுத்துவோம். டிஜிட்டல்மயப்படுத்தலின் ஊடாக ஊழலை 3 வருடங்களுக்குள் முற்றாக ஒழிக்க முடியும். டிஜிட்டல் பொறிமுறையூடாக பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்வோம். 20 லட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்குவோம்.
விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்துவோம். சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வோம் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Post a Comment