Ads (728x90)

பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். 

பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால் தகாத முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயல்படும் மதகுருமார்கள் மீது அதிகார சபை வழக்குப் பதிவு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget