Ads (728x90)

இலங்கை அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

163 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் அணித்தலைவர் றொவ்மன் பவல் அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் துனித் வெல்லாலகே மூன்று விக்கெட்டுக்களையும், மஹீஷ் தீக்ஷன, சரித் ஹசலங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 1 - 1 என இலங்கை சமப்படுத்தியது.

பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த இப் போட்டியில் அரைச் சதம் குவித்த பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டநாயகனாகத் தெரிவானார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget