Ads (728x90)

ஜப்பானின் புதிய பிரமராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஷிகெரு இஷிபா அந்நாட்டு பாராளுமன்றத்தினால் முறைப்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை பிரதமராக இருந்த புமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுத்தது. இதனையடுத்து அவா் இன்று நாட்டின் புதிய பிரதமராக அந்த நாட்டின் நாடாளுமன்றம் தெரிவு செய்துள்ளது.

புதிய பிரதமர் தனது அமைச்சரவையை அமைக்கவுள்ளதோடு, ஒக்டோபர் 27 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget