Ads (728x90)

மெக்சிக்கோவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். இத்தேர்தலில் அவர் 60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தேர்தல் நடைபெற்று மூன்று மாதங்களின் பின்னர் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மெக்சிக்கோ நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றுக் கொண்டார்.

புகழ் பெற்ற காலநிலை ஆராய்ச்சியாளரான இவர், 2007ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர். 2018 ஆம் ஆண்டில் தேர்தலில் வெற்றியீட்டி மெக்சிகோவின் முதல் பெண் மேயராக இருந்த இவர் 2000-2006 வரையில் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget