Ads (728x90)

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இன்னமும் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் ஒரு வார காலத்திற்குள் அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும், இல்லாவிட்டால் அவற்றை இணையவழியில் தான் வெளியிடப்போவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அறிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார். இந்த அறிக்கைகள் எவையும் காணாமல்போகவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget