Ads (728x90)

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது பெறுகைச் செயற்பாடுகள் ஒழுங்குமுறைக்கமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், ஒரு சிலருக்கு மாத்திரம் ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு மாறாக பிரதேச மற்றும் கிராமிய மக்களுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் குறித்த வேலைத்திட்டங்களை தயாரிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்வது இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதாகும் என்றும், அதற்கான வேலைத்திட்டங்களை ஒழுங்குமுறைக்கமைய திட்டமிடுவதால் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது சுற்றாடல் பாதிப்புகள், நிதி பாதிப்புகள், பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பவற்றை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.



Post a Comment

Recent News

Recent Posts Widget