ஜயிக்கா நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஜயிக்கா நிறுவனத்தின் உதவியுடன் இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் 11 வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவுசெய்வது குறித்து அண்மையில் ஜப்பான் தூதுவர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதோடு, அந்த செயற்பாடுகளை துரிதப்படுத்துவது குறித்தும் நேற்றைய சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

Post a Comment