28 அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்சாரம் மற்றும் நீர்க்கட்டண நிலுவைகள் அனைத்தையும் செலுத்தியதன் பின்னரே குறித்த இல்லங்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை தொடர்ந்தும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை பொருட்படுத்தாமல் செயற்படும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment