Ads (728x90)

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகளை அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிறு முறைப்பாடுகளையும் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget