Ads (728x90)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்த குழுவின் விசாரணைகளின் நம்பகத்தன்மை குறித்து பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இந்த வருடம் ஓய்வுபெற்ற நீதிபதி ஏஎன்ஜே அல்விஸ் தலைமையில் குழுவொன்றை அமைக்க தீர்மானித்தமைக்கு என்ன காரணம், அதன் நோக்கம் என்னவென மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஏன் இந்த குழுவை அமைத்தார் என்பது சந்தேகத்திற்குரிய விடயமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஷானி அபயசேகரவையும், ரவி செனிவிரத்னவையும் அரசியல்ரீதியில் பழிவாங்குவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டதா என்பது குறித்து சந்தேகம் கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget