ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ரக்காவுமி கடேநோ உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று முன்தினம் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார். இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக பிரதமர் குறித்த பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான செயற்பாட்டு பிரதானி சொல்பொன் மம்பேரோவா, சிரேஷ்ட சமூக அபிவிருத்தி அதிகாரி ஹேரத்பண்டா ஜயசுந்தர, ஆசிய அபிவிருத்தி வங்கி பிரிவின் பணிப்பாளர் உதேனி உடுகஹபட்டுவ மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்த்ரீ உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
Post a Comment