Ads (728x90)

புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

10 ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்களும் உள்ளடங்கலாக மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget