சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5,545 குடும்பங்களைச் சேர்ந்த 19,200 பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டி.என் சூரியராஜா தெரிவித்தார்.
தொடர் மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த சீரற்ற காலநிலை காரணமாக 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் அனர்த்த நிலை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, நல்லூர், தெல்லிப்பழை , சங்கானை, காரைநகர், கோப்பாய், சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம், உடுவில், நெடுந்தீவு, கரவெட்டி, வேலணை, மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
வடக்கின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான்
கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெருமளவான வெள்ள நீர் வெளியேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்வதனால் மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
Post a Comment