மத்திய, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பிரதான 16 குளங்கள் பெருக்கெடுத்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பொறியியலாளர் லஹிருனீ ஜயதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பல நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதால் குளங்களுக்கு இருமருங்கிலும் தாழ் நிலப்பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுள்ளார்.
Post a Comment