Ads (728x90)

2024 பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கம்பஹா  மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

அதேநேரம் இந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 வாக்குகளை பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற சாதனையை மஹிந்த ராஜபக்சவே வைத்திருந்தார். அவர் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

எனினும் இம்முறை தேர்தலில் அவரின் அந்த சாதனையை ஐக்கிய மக்கள் சக்தியின் இரு பிரதான வேட்பாளர்களும் முறியடித்துள்ளனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget