இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய உலகின் பிரபல தொடர்பாடல் நிறுவனமான ஆஸியாட்டா (Axiata) குழுமத்தின் தொடர்பாடல் வர்த்தக நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியாவார்.
அவர் டிஜிட்டல் தொடர்பாடல் தொடர்பில் பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
பிரித்தானிய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியியலாளராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய வோர்விக் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாக பட்டம் பெற்றுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான நிறுவன கட்டமைப்பிற்குள் பல நிறைவேற்றுத் தலைமைப் பாத்திரங்களை அவர் வகிக்க உள்ளார். இதற்கு மேலதிகமாக ஜனாதிபதியின் விடயப்பரப்பின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சான டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேற்பார்வையிடும் உயர்மட்ட நிறுவனமான டிஜிட்டல் பொருளாதார அதிகார சபையின் தலைவர் ஆகிய இரண்டு பதவிகளையும் அவர் வகிப்பார்.
Post a Comment