தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றில் 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 (61.56 %) வாக்குகளுடன் 159 பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் இலங்கையில் தனி ஒரு கட்சி இந்த சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் தடவையாகும்.
இதேவேளை ஐக்கிய மக்கள் கூட்டணி 1,968,716 வாக்குகளுடன் 40 பாராளுமன்ற ஆசனங்களை வென்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுள்ளது.
அத்தோடு 08 ஆசனங்களைக் கைப்பற்றி பாராளுமன்றத்தில் மூன்றாவது இடத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி வென்றுள்ளது.
Post a Comment