அமெரிக்கா தனக்கு சக்திவாய்ந்த ஆணையை மீண்டும் வழங்கியுள்ளதாகவும், எங்கள் தேசத்தின் காயங்களை ஆற்றப்போகின்றோம் எனவும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது அமெரிக்காவின் பொற்காலமாக அமையும். இது அமெரிக்க மக்களிற்கு மிகவும் அற்புதமான வெற்றி. இது அமெரிக்காவை மிகப்பெரியதாக்க உதவும்.
இந்தளவு வெற்றியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். எனக்காக பல பகுதிகளில் பிரசாரம் செய்த எலான் மஸ்கிற்கு நன்றி. துணை அதிபராக தேர்வாகும் ஜேடி வான்ஸ்க்கு வாழ்த்துகள்.
நீங்கள் ஒரு நாள் உங்கள் வாழ்க்கையில் இந்த நாளை மிகவும் முக்கியமான நாளாக கருதுவீர்கள். அமெரிக்கா எங்களிற்கு மிகவும் வலுவான முன்னொருபோதும் இல்லாத ஆணையை தந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment