10 ஆவது பாராளுமன்றத்தின் சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பிமல் ரத்நாயக்க புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக உள்ளார்.
அதேபோல் புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றபோதே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment