ஒரு சாதாரண சந்தன மர கடத்தல்காரனாக இருந்த புஷ்பா எப்பிடி ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆளுகிறார் என்பதுதான் புஷ்பா 2 படத்தின் கதை.
ஸ்ரீவள்ளியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, புஷ்பா முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுப்பதைப் பார்க்க ஆசைப்படுகிறார், ஆனால் முதல்வர் புஷ்பா ராஜை ஒரு கடத்தல்காரர் என்று கூறி அவருடன் புகைப்படம் எடுக்க மறுக்கிறார்.
முதல்வரை நீக்கிவிட்டு தன்னுடைய சித்தப்பாவை அந்த பதவியில் அமர வைக்க புஷ்பா முடிவு செய்கிறார். அதே நேரத்தில் வெளிநாடு செல்லும் சிவப்பு சந்தன மர கட்டைகளை, பன்வர் சிங் ஷெகாவத் பிடிக்க முயற்சிக்கிறார்.
இந்த இரு பிரச்னைகளை எப்படி சமாளித்தார் புஷ்பராஜ்? அதன் பிறகு என்ன நடந்தது? இதுதான் படத்தின் கதை.
அதே போல் பகத் பாசிலுக்கான அறிமுகமும் மிரட்டலாக இருந்தது. புஷ்பராஜை பழிவாங்க துடிப்பதில் அவர் ஆவேசம் காட்டுகிறார். இவர்களுக்கு அடுத்தப்படியாக ராஷ்மிகா மந்தனாவும் படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார்.
ரொமான்ஸ் மற்றும் நடனம் என இரண்டிலுமே ராஷ்மிகா அசத்தியுள்ளார். பீலிங்ஸ் பாடல் இமைக்காமல் பார்க்க வைக்கும் அளவிற்கு அவரது ஆட்டம் உள்ளது.
3 மணி 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை எங்கும் தொய்வில்லாத வகையில் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் சுகுமார். படம் முழுக்க மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இருந்தாலும், சென்ட்டிமென்ட் காட்சிகள் மனதை தொடும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment