Ads (728x90)

கடந்த அரசாங்கத்தால் மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 62 பேர் சகல சலுகைகளுடனும் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தற்போதைய எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் விசேட உத்தரவுக்கு அமைய இவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாகக் கூறி அதன் தொழிற்சங்கங்கள் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தன. 

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி இருந்தும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடமையை செய்யாமல் தவிர்க்கும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி இலங்கை மின்சார சபையின் 62 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget