Ads (728x90)

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக சேறுபூசும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்களை பார்த்து நாம் அனுதாபப்படுகிறோம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதி அமைச்சரிடம் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்று இன்னும் ஒரு மாத காலம் கூட ஆகவில்லை. இந்த நாட்களில் நாம் எமது எதிர்கால பயணத்திற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். எமக்கென்று தெளிவான கொள்கைகள், திட்டங்கள்  உள்ளன. நாம் நாட்டு மக்களிடத்தில் தெளிவான திட்டங்களை முன்வைத்துள்ளோம். எனவே நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

அதற்கு மாறாக ஒருபோதும் செயல்படமாட்டோம். தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக சேறுபூசும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். உண்மையில்  அவர்களை பார்த்து நாம் அனுதாபப்படுகிறோம். இதனை தவிர வேறொன்றும் எம்மால் செய்ய முடியாது. இந்த நாட்டை சரியான பாதையில் நாம் வழிநடத்துவோம் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறோம்.


Post a Comment

Recent News

Recent Posts Widget